அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவு படி 19.01.2023 அரியலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுனர்களுக்கு “சாலை பாதுகாப்பு வாரவிழா 2023 முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 50 வாகன ஓட்டுநர்களுக்கு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அரியலூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து நடத்தியது. இதில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சின்னதுரை மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.