திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர்சிங், இ.கா.ப, அவர்கள் தலைமையிலான, வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள், அவர்கள் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்படை போலீசார் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், (15.11.2022)-ம் தேதி இன்று வாகன தணிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மினி லாரியின் அடியில் இரகசிய கபோர்டு அமைத்து அதில் சுமார் 100 கிலோ எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது தெரியவந்துள்ளது. மேற்படி கஞ்சாவை கடத்தி வந்த திருவைகுண்டம், இராமானுஜம்புதூரை சேர்ந்த தளவாய்மாடன் (24) என்பவரை போலீசார் கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஆதிச்சநல்லூரை சேர்ந்த பிரவின், புதுக்குடியை சேர்ந்த அருள்பாண்டி மற்றும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.