தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறும், காவல்துறையினரின் குறைபாடுகளை சரி செய்யுமாறு மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்,
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த வாகன ஆய்வின் போது ஆயுதப்பபடை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. த.பேச்சிமுத்து, ஆயுதப்படை (பொறுப்பு) போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு. செல்வக்குமார், தலைமைக் காவலர் திரு. ராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.