திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புத்தாக்க பயிற்சி (Refresher Training) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பயிற்சி நிகழ்ச்சி, பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரை காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் போது, காவல் பணிகளில் சட்ட அறிவு, தொழில்முறை திறன் மேம்பாடு, பொதுமக்களுடன் நட்புறவு, பணிச் சீர்மை, ஒழுக்கம் மற்றும் சமகால காவல் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. காவல் பணிகளை திறம்படவும் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த புத்தாக்க பயிற்சி மூலம் காவல் துறையினரின் செயல்திறன் மேலும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















