தூத்துக்குடி: தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்களுக்கு, தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 35 காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி புதிதாக கட்டப்பட்ட 3 ஆய்வாளர் குடியிருப்புகள், 9 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் 23 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 35 காவல்துறை குடியிருப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பார்வையிட்டு காவலர் குடியிருப்பில் ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.