திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS இன்று மாலை பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில், காவலர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும் தமிழக அரசு உத்தரவில் அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, பட்டாசு வெடித்து காவலர் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். அவ்விடமே விழாக்கோலம் கோலமாக காட்சி அளித்தது.
மன அழுத்தத்தில் இருக்கும் காவலர்களுக்கும் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கும், இது போன்ற பண்டிகை நாட்களில் காவல் உயர் அதிகாரி, தன் குடும்பத்துடன் கலந்து கொண்டு, அவர்களை உற்சாகப் படுத்தியது அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்