விருதுநகர் : அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நடைபெற்ற இரட்டை கொலை – கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சிறப்பு குழு (Special Team) காவல்துறையினரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர்,இ.கா.ப, அவர்கள் வெகுவாக பாராட்டி பண வெகுமதி வழங்கினார்கள்.