திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. அறிவுறுத்தலின் படி திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை நிர்வாக அலுவலகத்தில் காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (தலைமையிடம்), தலைமையில் இரண்டு நாட்களுக்கான புத்தாக்க பயிற்சி (06.02.2026) அன்று தொடங்கியது.
இந்த புத்தாக்க பயிற்சியானது, புலனாய்வு பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வண்ணம், புதிதாக அமல்படுத்தப்பட்ட (BNS, BNSS, BSA) சட்டப்பிரிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ், சந்தேக மரண வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள், சிறு காயம் மற்றும் கொடுங்காய வழக்குகள், விபத்து வழக்குகள் ஆகியவற்றின் புலன் விசாரணையினை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில், திருநெல்வேலி மாநகரத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், மற்றும் தலைமை காவலர்கள் என மொத்தம் 25 நபர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















