இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த திரு.உமையசேகர் என்பவர் உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாக, நாடக கலைஞர் இராதாகிருஷ்ணன் என்பவர் முகநூலில் பதிவிட்டார். இதனை அறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V.வருண்குமார், இ.கா.ப அவர்கள் 27.07.2020-ம் தேதியன்று தனது சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 10,000/- மற்றும் முதுகுளத்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு காவல் ஆளினர்கள் ரூபாய் 5,000/- என மொத்தம் ரூபாய் 15,000/-யை முதுகுளத்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு காவல் ஆளினர்கள் மூலம் உமையசேகரிடம் வழங்கினார்கள்.
மேலும், காவல்துறை சார்பாக திரு.உமையசேகருக்கு சேர வேண்டிய பண பலன்கள் அனைத்தையும் உடனடியாக வழங்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
நமது குடியுரிமை நிருபர் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
நமது குடியுரிமை நிருபர் ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்