காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியதில் அதிகப்படியான உபரி நீரானது மதகு வழியாக வெளியேறுகிறது.
இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு,M.சுதாகர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் அக்கிராம மக்களை சந்தித்து கிராம மக்களிடம் நீரில் இறங்கி குளிக்கவோ, ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் ஏரிக்கு செல்வதை கண்காணிக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் காவலர்களை நியமிக்க உத்திரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்