கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ.சுந்தரவதனம் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று கரூர் மாவட்ட காவல் துறையினருக்கு கவாத்து பயிற்சி, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து (03.02.2023) அன்று மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஆயுதப்படை ஆய்வாளர் திரு. S. காளீஸ்வரன் அவர்கள் தலைமையில் உடற்பயிற்சி, ஆயுதங்களைக் கொண்ட கவாத்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது காவலர்களிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் மற்றும் ஆயுத வைப்பு அறையை பார்வையிட்டு ஆயுதப்படையில் உள்ள கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பின்பு ஆயுதப்படை வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி அறை மற்றும் காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டு காவலர்களின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.