திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி கடந்த (19-01-2026) ம் தேதி முதல் (07-02-2026) ம் தேதி வரை நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டன. கூட்டு கவாத்து பயிற்சியின் நிறைவு நாளான (07-02-2026) ம் தேதியன்று, வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ச்சியாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், உத்தரவின் பேரில், (14.02.2026) அன்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு மாபெரும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ணகுமார், இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















