தேனி: தேனி அருகே வீரபாண்டியில்உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக, வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது சாராய ஊறல் போட்ட வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜவேல் (50), மற்றும் பாதிப்படைந்த சுந்தரவேல் (39), மற்றும் ராஜசேகரன்(33), ஆகியோரை கைது செய்த, போலீஸார், இவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரையும் கைது செய்த வீரபாண்டி போலீசார் சாராய ஊறலை அழித்தனர்.