திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையின் முதல் தவணையையும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) G.S.அனிதா,(தலைமையிடம்) S.விஜயகுமார்,(கிழக்கு) மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்