திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியில் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோரிடம் கல்வி உதவித் தொகை கிடைத்ததாக கூறி வங்கி விவரங்களை பெற்று ரூ.99,743 மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஏற்பட்டது. புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் தில்லியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் தில்லிக்கு சென்று ராஜி (24). ரிஷி (27). ராகுல் (30). ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை இதேபோல் தொடர்பு கொண்டது விசாரணையில் தெரியவந்தது. வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும், இது போன்ற மோசடி அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம்; மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணில் அல்லது ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















