திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தரேவு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கண்ணன் (35), என்பவரை அவரது மனைவி சிலம்பரசி (30), என்பவர் அறிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சிலம்பரசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சங்கரேஸ்வரன் அவர்கள் நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.ராஜேஸ்வரி, அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று (17.10.2022), ம்தேதி திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சிலம்பரசி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா