மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலம்பட்டி அருகே நேற்று (31.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) கார்த்திக் (35). 2)சந்துரு (24). ஆகிய இருவரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 5 kg கஞ்சா பறிமுதல் செய்தனர். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
















