மதுரை: உத்தப்பநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், (11.04.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெரியகருப்பன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை, போதைப் பொருள் தடுப்பு பணியில் காவல்துறையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.மேலும், கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 91760-79100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.




















