குமரி : கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் I.P.S, அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த அஸ்லாம் (25), முகமது இர்பான் (20) அல் அனீஷ் (24) மற்றும் திட்டுவிளை பகுதியை சேர்ந்த முகமது அனாஸ் (25) ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்து கோட்டார் காவல் நிலைய எல்லைகுட்பட்ட அனாதைமடம் அருகே ஒரு கல்லூரியியின் அருகில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவர்களை கோட்டார் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜற்படுத்தி சிறையில் அடைத்தனர் . மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.