மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுபட்டி அருகே (01.02.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் சக்தி முனி (20)., முகேஷ் கண்ணன் (26)., சடையாண்டி (20)., ஆனந்த் (35)., விவேக் (35)., பாஸ்கரன் (41)., பிரேம் குமார் (37)., ஆகியோர்களை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 13 kg கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
















