திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் ஏர்வாடி பொறுப்பு உதவி ஆய்வாளர், சுபாஷினி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ராஜபுதூர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நம்பிதலைவன் பட்டையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (32). நம்பிராஜா (23). இசக்கிராஜா (28). ஆகிய மூவரையும் சோதனை செய்ததில் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகசுந்தரம், நம்பிராஜா, இசக்கிராஜா ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















