திருச்சி : திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவாத திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், இ.கா.ப., அவர்களின் தனி தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சோமரசம்பேட்டை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டும், கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோ பதிவிட்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 5 பேரை கைது செய்தனர்.