திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வள்ளியூர் – ஏர்வாடி செல்லும் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நாங்குநேரி, கலுங்கடியை சேர்ந்த லென்ஸ்குமார் (23) ஏர்வாடி, சீனிவாசபுரத்தை சேர்ந்த அய்யாபிச்சை (21) ஆகிய இருவரையும் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பையில் வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள், இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது, அவர்கள் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.