திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். 24.09.2020 அன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் படி வந்த பொலிரோ பிக்கப் வண்டியை சோதனை செய்ததில், அதில் கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கல் RM காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சீலப்பாடி பகுதியைச் சேர்ந்த சோனைமுத்து, கிழக்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த பரணி, N. பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த யுவராஜ், ஜெய்சங்கர், வடமதுரை பகுதியைச் சேர்ந்த பாண்டியப்பன், மற்றும் திண்டுக்கல் திருநகர் பகுதியைச் சேர்ந்த ராகவன் ஆகிய 7 நபர்களையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி மெச்சத் தகுந்த பணிபுரிந்த தனிப்படையினர் மற்றும் காவல்துறையினரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ் முத்துசாமி இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா