திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு ரயில் நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர், கோலப்பன் மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த கண்டியப்பேரி கலாம் நகரை சேர்ந்த செல்லப்பா மகன் ஜெயராமன்(25). என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















