திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட கீழதேவநல்லூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கண்ணன் என்ற துண்டால் கண்ணன் (34) என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக ஏர்வாடி காவல் ஆய்வாளர் திரு. ஆதாம் அலி அவர்கள் (பொறுப்பு) கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்உத்தரவின் பேரில், குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.