திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி (20). மற்றும் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஸ்ரீனிவாசபெருமாள் (21). ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மானூர் காவல் ஆய்வாளர், அருண்குமார் மேற்படி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார்,இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (05.04.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















