கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அருகே குடியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் கெலமங்கலம் போலீசார் , சென்று ஆய்வு செய்த போது, முருகேசன் என்பவர் வீட்டில் 30 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து முருகேசனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்