திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற கேரளாவைச் சேர்ந்த சிராஜ் மூன்(28). பரத் கிருஷ்ணா(25). மற்றும் முகமது நசிபில்(28). ஆகிய 03 நபர்களையும் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அழைத்து சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்து 03 நபர்களையும் கைது செய்தனர். மேலும்
அவர்களிடமிருந்து 660 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















