குமரி: கன்னியாகுமரி நெய்யூர் அருகே ஆலங்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர்மூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் மற்றும் மண்டல துணை தாசில்தார் திரு.சந்திரசேகர் ஆகியோர் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.