தாம்பரம் : தாம்பரம் கூடுவாஞ்சேரி காவல் சரகம் ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அரசிதழ் எண் 2ல் (20/2/2023), மற்றும் எண் 26 இல் (17/05/2023) ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் கழிவு வாகனங்களாக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் GST பதிவு எண் ஆதாரங்களுடன் டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் (24/6/2023) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் முன்பதிவு கட்டணம் ரூபாய் 500 செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் பதிவு செய்த ஏலதாரர்கள் ஏல குழுவினர் முன்னிலையில் 4 7 2023 அன்று காலை 10 மணிக்கு டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ளவும் மேலும் பதிவு செய்த நபர்கள் மட்டுமே பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத் தொகையை அன்றைய தினமே 100% செலுத்த வேண்டும் மேலும் அதற்கான GST கட்டணத்தை செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்பட்டு ஏலம் எடுத்த வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்