திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்லிகோட்டை அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபா்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள், பல்லிகோட்டையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (30). தூத்துக்குடி மாவட்டம், ராஜாபுதுக்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23). என்பதும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














