திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெடி இடுப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதியினரின் தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை அனன்யா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ரா தனது மகளை அழைத்துக்கொண்டு, வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியில், உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்றுக் காலை 9 மணியளவில் குழந்தையை குளிக்க வைப்பதற்காக, வீட்டிலிருந்த குடத்தில், தண்ணீர் நிரப்பி அதில் வாட்டர் ஹீட்டர், கருவியை பொருத்தி, தண்ணீரை சூடு படுத்தி உள்ளார். அந்த நேரத்தில், குழாயில் தண்ணீர் வந்ததால் குழந்தையை, வீட்டில் விட்டு விட்டு, பவித்ரா தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா வாட்டர் ஹீட்டர் உடன் இருந்த தண்ணீரில் கையை வைத்துள்ளது. அப்போது குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டு, பேச்சு குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு, பவித்ரா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு, சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை மின்சாரம் தாக்கியதில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட பவித்ரா அங்கேயே கதறி துடித்தார். இது குறித்து வந்த தகவலின் பேரில், வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.