திருநெல்வேலி: தாழையூத்து அருகே ஏடிஎம்யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு தாழையூத்து காவல்துறையினர் பாராட்டு. வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் (50). என்பவர் (05.02.2024) காலை தாழையூத்து போஸ்ட் ஆபிஸ் அருகே உள்ள SBI ATM ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்னால் வந்த நபர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் சென்றுள்ளார். பின்னர் பெருமாள் பணம் எடுக்க ஏடிஎம் அறைக்குள்ளே சென்ற போது ரூபாய் 8 ஆயிரம் பணம் ஏடிஎம் மிஷினில் வெளியே இருந்துள்ளது. இதனை அறிந்த பெருமாள் தாழையூத்து காவல் நிலையத்திற்கு வந்து ரூபாய் 8 ஆயிரம் பணத்தை நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இதனை தாழையூத்து காவல் நிலைய காவல்துறையினர் பெருமாள் என்பவரின் நேர்மையை வெகுவாக பாராட்டியுள்ளனர்.