திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. வி.பிரசன்ன குமார், இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், (09.04.2026) அன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, தேர்தல் பாதுகாப்பு பணிகள், நிலுவையில் உள்ள வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்டவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையின் அனைத்து வாகனங்களையும் பார்வையிட்டு அதன் செயல்பாடு மற்றும் பராமரிப்பினை கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















