திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையில் (10.02.26) அன்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள் , கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது , பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், குற்றவாளிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் , நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக காவல்துறையின் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு குற்ற வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உட்பட சிறப்பாக பணிபுரிந்த 102 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















