தென்காசி: தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் சமீப காலமாக “தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் தட்டச்சு பணிக்கு பெண்கள் மட்டும் உடனடி தேவை, தகவலுக்கு செல்போன் எண்ணில் அணுகவும்” என போலி செய்தி பரப்பி மர்ம நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், A. மயில்வாகனன், இ.கா.ப., உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசர் தலைமையில், காவல் ஆய்வாளர், வசந்தி மற்றும் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு நிரந்தர வேலை வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை, ஐயர்பாடியை சேர்ந்த லாசர் என்பவரின் மகன் சார்லஸ் விஜயகுமார் (வயது 31). என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இணையதளத்திலும், வாட்ஸ் ஆப் குழுவிலும் இதுபோன்ற பரவி வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து விட வேண்டாம் எனவும் இதுபோன்ற வேலைவாய்ப்பு மோசடி குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















