மதுரை:மதுரைமேலூர் அருகே உள்ள சின்னபெருமாள்பட்டியை சேர்ந்தவர் மரைக்காயர். இவரது மகன் அஜீஸ் (வயது 27). இவர் கெமிக்கல் என்ஜினீயர்.
இவரது வீட்டு அருகே வசிப்பவர் சச்சிதானந்தம் (60). இவர்கள் 2 பேர் குடும்பத்துக்கு இடையே இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இதில் அஜீஸ் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலூர் போலீசார் சச்சிதானந்தம், அவரது மகன்கள் ராமு, ராஜா மற்றும் உறவினர்கள் அழகர், இளையராஜா, சுகுமாறன், ஆனந்தன், கண்ணதாசன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சச்சிதானந்தம், அழகர், இளையராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.