தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு ‘O’positive இரத்தவகை 2 யூனிட் அளவு தேவைப்படுவதாகவும், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ சிகிச்சைக்காக ‘O’positive இரத்தவகை 1யூனிட் அளவு தேவைப்படுவதாகவும் தகவல் கிடைத்தவுடன் தேனி மாவட்ட ஆயுதப்படை காவல்ஆய்வாளர் திரு.சஜுகுமார் அவர்களின் முயற்சியால் காவலர்கள் திரு.கொடி, திரு.ராமநாதன், திரு.புவனேஷ் ஆகியோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று தக்க மருத்துவப் பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கினர்.