குமரி : கன்னியாகுமரி மாவட்டம், மொபைல்போன் அழைப்பு மூலமாக மருதங்கோடு பகுதியை சேர்ந்த பெண்ணிடம் அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில கிபிட் பொருட்கள் தருவதாக கூறி நம்ப வைத்து, customs clearance fees மற்றும் Income Tax பணம் செலுத்த வேண்டும் எனவும் பல்வேறு கட்டங்களாக 9,49,000/- ரூபாயை அடையாளம் தெரியாத சைபர் மோசடி நபர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து அந்தபெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்களிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அவர்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரின் தீவிர விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் அமான் கான் (19) என்பது தெரியவந்தது. உடனே உத்திரபிரதேசம் மாநிலம் விரைந்த குமரி சைபர் போலீசார் எட்டாவா மாவட்டம் சென்று இரு குற்றவாளிகளையும் கைது செய்து குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். உத்திரபிரதேச மாநிலம் சென்று குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த சைபர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.