தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று நேரில் சென்று மதிய உணவு வழங்கி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் உள்ள நேசகரங்கள் குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல்,
அடிக்கடி கைகளை சோப்பு மறறும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.