திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை (31.01.2026) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் ஆர்ச் வரை நடைபெற்றது. பேரணியில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரங்கன்றுகள் கொடுத்தும், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி, அவர்களுக்கு தலை கவசமும் காவல் ஆணையர், வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், ஆளினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















