திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 220 வாகனங்களில் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் 176 இரு சக்கர வாகனங்களும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் 44இரு சக்கர வாகனங்களும் கண்டெடுக்கப்பட்டு வல்லுநர் குழுவால் மேற்படி வாகனங்கள் விலை நிர்ணயம் செய்து வருகிற (29.01.2024) அன்று காலை 09.00 மணிக்கு வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து பொது மக்கள் முன்னிலையில் பொது ஏலம் விட வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புபவர்கள் (28.01.2024)-ம் தேதி காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வாகன அலுவலகத்தில் ரூபாய் 5,000-ஐ முன் பணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். ஏலத்தில் பங்கு பெறாதவர்கள் முன் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்கள் முன்கூட்டியே சென்று வாகனங்களை பார்வையிடலாம் என்ற தகவலை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.