திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம், புதுபட்டியை சேர்ந்த செல்வகோடி (40), முக்கூடலை சேர்ந்த முத்துராஜ் (55), மற்றும் சிங்கம்பாறையை சேர்ந்த ஜோசப்ராஜசிங் (60), ஆகியோர் முக்கூடல் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. மேற்படி தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.ஆல்வின், மற்றும் தனிப்படை போலீசார் முத்துராஜ் கடையை சோதனை செய்ததில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் செல்வகோடி மற்றும் முத்துராஜை கைது செய்து 35 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.