திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி, கார்மேகநகரை சேர்ந்த ரத்தினபாண்டி என்பவரின் மகன் மாணிக்கம் என்ற மகேஷ 28. மற்றும் கிருஷ்ணாபுரம் கலைகோவில் நகரை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் வினோத் என்ற வினோத் குமார் 29. ஆகியோர் சிவந்திப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி நபர்கள் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.அன்புபிரகாஷ் அவர்கள் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.