அரியலூர் : அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாலம் அமைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை 3 வாலிபர்கள் திருடி ஒரே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் இருந்த மீன்சுருட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திரு.வீரமணி, அவர்களை கண்டதும் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சுண்டிபள்ளம் காலனி தெருவை சேர்ந்த ரஞ்சித் (23) மணிவேல் (33) ஆகாஷ் (21), என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 70 கிலோ இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.