திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு-வை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் வெள்ளோடு அருகே உள்ள போக்குவரத்துநகரை சேர்ந்த கருத்தபாண்டி மகன் கார்த்திக்பாண்டி(30). என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது குறுக்கே நாய் வந்ததால் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார் அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் கார்த்திக் பாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















