கோவில்பட்டி: சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று எஸ்.பிஆய்வு செய்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து, ஊரடங்கு விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்து, தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய கோவில்பட்டி காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவையும், நெறிமுறைகளையும் பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியேற்று சுற்றுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.