மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் மணல் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் விரகனூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வெள்ளைப் பூனை வயது (22) என்பவரை மணல் கடத்திய குற்றத்திற்காக சிலைமான் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்களின் பரிந்துரையின் பேரில் 29.09.2020ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி விக்னேஷ் என்ற வெள்ளைப் பூனை என்பவரை மணல் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மணல் திருட்டில் ஈடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் எச்சரித்துள்ளார்.