திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த (29). வயது இளைஞர், இணையவழி வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு, கடந்த டிச.8 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வந்த வா்த்தகம் தொடர்பான விளம்பரத்தை நம்பி அதில் கூறியபடி விவரங்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு எண்களில் இருந்து வா்த்தகம் தொடர்பான அழைப்புகள் வந்துள்ளது. அதில், அவரைத் தொடர்பு கொண்ட மர்மநபர் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய அவர் ரூ.15,11,460ஐ பல்வேறு தவணைகளாக அந்த நபர் அனுப்பிய வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து மாநகர சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்ததின் பேரில் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















